இந்தியா தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட மெலனியா ட்ரம்ப்

Report

தாம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை உற்சாகம் அளிபதாக ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அவர்கள் இருவரும் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் சர்தார் படேல் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு சிறப்பான வரவேற்பை இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மெலனியா ட்ரம்ப் டிவிட்டரில் , தங்களை அழைத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு செல்ல காத்திருப்பதாகவும், இரு நாட்டுக்கும் இடையேயான உறவை கொண்டாடவும் இந்த பயணத்தை நினைத்து தானும் ட்ரம்பும் உற்சாகத்தில் இருப்பதாகவும் மெலனியா தெரிவித்துள்ளார்.

1784 total views