எச்சரித்தார் டிரம்ப் - இறங்கி வந்தது இந்தியா

Report

அமெரிக்க ஜனாதிபதி டொரம் விடுத்த வேண்டுகோளை அடுத்து மலேரியா தடுப்பு மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஓரளவு தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றிற்கு மலேரிய தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புணர்வு வாய்ந்த எந்த அரசாங்கத்தையும் போல எங்கள் மக்களிற்கு போதியளவு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள முதல் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான அவசர சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கான மருந்துகள் இந்தியாவில் உள்ளன என்பதை உறுதி செய்த பின்னரே மருந்து ஏற்றுமதி தடையை சிறிது தளர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

10689 total views