சீனாவுக்கு மிரட்டல் விடுக்கும் டிரம்ப்

Report

கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் WHO ஆல் சீனாவுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டதாகவும் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus’ மறுத்துள்ளார்.

அத்துடன் சர்வதேச அமைப்பான WHO சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டதாக் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

10325 total views