17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்ற அமெரிக்கா அனுமதி!

Report

17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரணதண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன, எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் இன்னும் உள்ளதாக அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின.

அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் லீ (வயது 47) என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது. அமெரிக்காவில், 17 ஆண்டுகளுக்கு பின், ஒரு குற்றவாளிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இது முதல் முறையாகும்.

லீக்கு, விஷ ஊசி செலுத்தி, தண்டனையை நிறைவேற்ற, திங்கள் நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘கொரோனா‘ வைரஸ் அச்சத்தால், தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி நீதிமன்றை அணுகினர்.

அதனைத் தொடர்ந்து இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இண்டியானா நீதிமன்றின் தீர்ப்பினை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் கொலை குற்றவாளி லீக்கு மரண தண்டனை நிறைவேற்ற அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

6027 total views