வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை!

Report

தொடர்ச்சியான மோசமான வாக்குப்பதிவு முடிவுகளுக்கு இடையே வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப்,

இந்த முறை அஞ்சல் வாக்குப்பதிவுகளுடன் முன்னெடுக்கப்படும் 2020 தேர்தலானது வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்ட அவர்,

இது அமெரிக்காவிற்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாக இருக்கும் என சுட்டிக்காட்டிய டிரம்ப், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு ஜனாதிபதி, தேர்தலை தாமதப்படுத்த கோருவது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.

அஞ்சல் முறையில் வாக்குப்பதிவு என்பது தம்மை தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் சதி வலை என கொந்தளிக்கும் ஜனாதிபதி டிரம்ப்,

இத்தகைய தேர்தலானது சட்டவிரோத குடியேறியவர்கள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் கூட மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இது தமக்கு எதிராக தேர்தலை நியாயமற்ற முறையில் முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆனால், சட்ட விதிகளின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த எந்த ஜனாதிபதிக்கும் அதிகாரமில்லை என கூறப்படுகிறது.

டிரம்பின் இந்த கோரிக்கையானது பல அறிஞர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோல்வி பயமே இதற்கு காரணம் எனவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் 4.5 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி, 153,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில்,

அஞ்சல் முறை தேர்தலுக்கு பெரும் ஆதரவு குவிந்து வருவதால் டிரம்ப் அதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

1300 total views