அமெரிக்காவில் நடுவானில் மோதிய விமானங்கள்! எம்பி உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு

Report

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

அலாஸ்கா மாகாணம் ஆன்கரேஜ் (Anchorage ) பகுதியிலுள்ள சோல்டாட்னா (Soldotna) விமான நிலையம் அருகே குறித்த 2 விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒரு விமானத்தில் இருந்த அலாஸ்கா மாகாண சட்டப்பேரவை கீழவை உறுப்பினரான (Alaska House of Representatives) குடியரசு கட்சியை சேர்ந்த கேரி க்னோப் (Gary Knopp) பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றோர் விமானத்தில் பயணித்த தெற்கு கரோலினாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு (National Transportation Safety Board) அமைப்பு, அமெரிக்க பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

1666 total views