ஹோட்டல்களில் அமர்ந்து உண்பவர்களுக்கு ஆபத்து! ஆய்வில் வெளியான தகவல்

Report

ஹோட்டல்களில் அமர்ந்து உணவு அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இரு மடங்கு அதிகம் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 11 கொரோனா தனிமை மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 14 நாட்களுக்குள் ஹோட்டல்களில் உணவருந்தியவர்கள், மற்றவர்களை விட இரண்டுமடங்கு பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரம் ஷாப்பிங் மால்கள்,சமூக நிகழ்ச்சிகள், அலுவலகங்கள், பொதுப்போக்குவரத்து அல்லது மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு முகக்கவசங்களை அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், தொற்று சாதாரண நிலையில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணிந்து கொண்டு சாப்பிடவோ, பருகவோ முடியாது என்பதால் தொற்று பரவும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

5872 total views