வெளியானது ஜோ பைடனின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

Report

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடவுள்ளார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்ட அவர், தற்போது தனது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்தார்.

மேலும் ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவரது வைத்தியர்கள் தெரிவித்ததாக ஜென் டில்லேன் கூறினார்.

1784 total views