நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த கமலா ஹாரிஸ்!

Report

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது.

இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அவர் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், நம்முடைய இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான விழாவாக அமைய வாழ்த்துகிறேன்.

நம்முடைய சமூகங்கள் மற்றும் அமெரிக்காவை அதன் நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விடுமுறை அமையட்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

953 total views