கொரோனாவால் எற்படும் மரணங்களை தடுக்க சிகிச்சையை கண்டுபிடித்த இந்திய அமெரிக்க பெண் டாக்டர்!

Report

கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் சிகிச்சையை இந்திய அமெரிக்க டாக்டர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் செயின்ட் ஜூட் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் திருமலா தேவி கண்ணேகந்தி. இவர் தெலுங்கானாவில் பிறந்து வளர்ந்தவர்.

வாரங்காலில் உள்ள காகத்தியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படிப்பும் முடித்துள்ளார்.

கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிகரித்துள்ள சூழலில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வும் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள இவர் எலிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், செல் உயிரிழப்புகளை ஏற்படுத்தி, திசுக்களை சேதமடைய செய்தல் மற்றும் பல உறுப்புகளை செயலிழக்க செய்தல் ஆகியவை பற்றி எலிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்கு எதிராக உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி, கொரோனா வைரசுக்கு எதிரான ஆய்வுடன் தொடர்புபடுத்தப்பட்டது. இதில், கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறையால், கொரோனா வைரசால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நுரையீரல் சேதம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றை தடுக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1006 total views