அமெரிக்காவில் பூமியை பிளந்து உள்ளே போன கார்கள்? அதிரவைக்கும் காணொளி

Report
625Shares

அமெரிக்காவில் உள்ள நேப்பிள்ஸ் மருத்துவமனையின், வாகனங்கள் நிறுத்துமிடத்தில், நடந்த ஒரு திகிலூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள புகழ்பெற்ற நேபிள்ஸ் மருத்துவமனையில் திடீர் என நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில், திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கியதில், மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்புகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.

இச்சம்பவத்தால், மருத்துவமனையில் கொரோனா வார்டில் மின்தடை ஏற்பட்டது. விரைவில் அப்பகுதி மீண்டும் சீரமைக்கப்பட்டு, மீண்ஐம் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இச்சம்பவத்தால், பெரிய உயிரிழப்புகள் ஏற்பவில்லை என்பதுடன் மருத்துவமனையின் செயல்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்துக்குள் விழுந்து அப்பளம் போல நொறுங்கின. சுமார் 20 மீட்டர் ஆழமும், 2 ஆயிரம் சதுர மீட்டர் அகலத்திலும் ஏற்பட்ட இந்த பள்ளத்தில், தீயணைப்பு வீரர்கள் பலர் குவிக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நகரத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, நிலத்தடிக்குள் நீர் ஊடுருவியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏபிசி நியூஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தின் வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கடந்த ஆண்டு இதே போன்றதொரு சம்பவம் நியூயார்க் நகரிலும் நடந்துள்ளது. இதனுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ‘2020 ஆம் ஆண்டின் சகோதரியாக 2021 ஆகி வருகிறது’ என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

25042 total views