
அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுவதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் செயல்பட்டு வரும் விலங்கு பூங்காக்களை அரசு மூடியது.
பொதுமக்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவி விட கூடாது மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எனினும் அங்குள்ள விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.