அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கி பிரயோகம்: ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report
0Shares

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கேப் கிரார்டியுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

162 total views