லெபனான் பிரதமர் ஹரிரி இராஜினாமாவை திரும்பப்பெற்றார்!

Report
5Shares

லெபனான் பிரதமர் ஷாட் அல் ஹரிரி தனது இராஜினாமாவை திருப்பி பெற்றுக்கொண்டுள்ளார். நேற்றைய தினம் லெபனானில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் அறிவித்துள்ளார்.

லெபனான் பிரதமர் ஷாட் ஹரிரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி, சவூதி அரேபியாவின் தொலைக்காட்சி சேவையொன்றில் திடீரென தோன்றிய ஹரிரி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஹரிரியின் இந்த செயலானது சர்வதேசத்தின் மததில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, இந்த அறிவிப்பிற்கு பின்னால் சவூதி அரேபியாவின் தலையீடுகள் காணப்படுகிறது என்ற குற்றச்சாடடுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில். சவூதி அரேபியாவில் தங்கியிருந்த பொழுது, இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹரிரி, உயிராபத்து இருக்கின்றமையினாலேயே பதவியை இராஜினாமா செய்ததாகவும், இதற்கு பின்னால் சவூதியின் தலையீடுகள் எவையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும், இவரது ராஜினாமாவை ஏற்க விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், பிரதமர் ஹரிரியை உடனடியாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் நாடு திரும்பிய பிரதமர் ஹரிரி, ஜனாதிபதி அவுனையும் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தான் அளித்த இராஜினாமாவை திரும்பிப் பெற்றுக்கொள்வதாக ஹரிரி அறிவித்துள்ளார்.

1091 total views