பறக்கும் டாக்ஸி சேவை! நாசாவுடன் கைகோக்கும் உபேர்

Report
18Shares

உபேர் கால் டாக்ஸி நிறுவனம், நாசா உடன் இணைந்து ‘பறக்கும் டாக்ஸி’ சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

நாசா மற்றும் உபேர் கால் டாக்ஸி நிறுவனம் இணைந்து, ‘ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை’ என்ற திட்டம்மூலம் ‘பறக்கும் டாக்ஸி’ சேவையை 2020-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இத்திட்டத்துக்கான ஒப்பந்தம், நேற்று நாசா- உபேர் இடையே கையெழுத்தானது.

‘நகர்ப்புற காற்று இயக்கம்’ மூலம் நாசா உபேருடன் இணைந்து, ஒரு புதுவித போக்குவரத்துச் சேவைக்கு அடித்தளமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான முதல் சோதனை ஓட்டம் 2020-ம் ஆண்டு நடைபெறும் என்றும், வணிக சேவைக்காக 2023-ம் ஆண்டு முதல் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விமானிகளுடன் செயல்படும் இச்சேவை, விரைவில் தானியங்கிச் சேவையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

”2028-ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது, ‘பறக்கும் சேவை’ வெகுவாகப் பயன்படும்” என உபேர் செய்தித்தொடர்பாளர் மேத்யூ விங் கூறியுள்ளார்.

1707 total views