இஸ்ரேல் பிரதமரிடம் 5-வது முறையாக விசாரணை

Report
12Shares

ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூவிடம் 5 வது முறையாக போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெட்டன்யாகூ உள்ளார். இவர் தனது நெருங்கிய நண்பரான ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆமோன்மிக்சான் என்பவரிடம் சட்டவிரோதமான வழியில் 10 ஆயிரம் டாலர் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கியதாகவும், இஸ்ரேல் தொழிலதிபர்களிடம் பெருமளவு நிதி பெற்று சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக ஏற்கனவே 4 முறை போலீசார் விசாரித்துள்ளனர். இன்று 5-வது முறையாக விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

397 total views