ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்கிறாரா ட்ரம்ப்?

Report
15Shares

வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான சந்திப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் சந்திப்பு ஏற்படுவதாக இருந்தால் அது அர்த்தமுள்ள சந்திப்பாகதான் இருக்கும்” என கூறினார்.

ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது ட்ரம்ப், புடினை சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என ரஷ்ய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளுக்கு 11 நாட்கள் டொனால்ட் ட்ரம்ப், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

788 total views