அமெரிக்க போலீஸை திணறடித்த கிளி !!

Report
46Shares

அமெரிக்காவில் கிளி ஒன்று பெண் குரலில் ஹெல்ப் ஹெல்ப் என கத்தி போலீஸாரை திணற வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருக்கும் கிளி ஒன்று வீட்டிற்கு வந்த கொரியர் பாயிடம் உதவி கேட்டு கத்தி இருக்கிறது.

அதுவும் அந்த கிளி பெண் குரலில் கத்தியிருக்கிறது.

ஒரு பெண் ஆபத்தில் மாட்டிக்கொண்டுள்ளார் என நினைத்து கொரியர் பாய் போலீஸுக்கு கால் செய்து இருக்கிறான்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கிளிதான் இவ்வாறு செய்திருக்கிரது என்பதை கண்டு வியந்து திரும்பிபோய் உள்ளனர்.

பெண் போலவே கத்தி போலீஸாரை சுற்றலில் விட்ட கிளி தற்போது ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ளது.

2013 total views