ட்ரம்பின் பயணம் வெற்றியடைந்துள்ளது: சீனா மகிழ்ச்சி

Report
38Shares

ட்ரம்பின் சீன பயணம் வெற்றியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ட்ரம்ப் முதன்முறையாக 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டொனால்டு ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியாவால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்பின் சீன பயணம் வெற்றியடைந்துள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) சீனாவின் முன்னணி ஊடகங்களும், நாளிதழ்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சீன ‘டெய்லி’ நாளிதழின் துணை ஆசிரியர் சின் வைஹுவா கூறும்போது, "அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில், சீனாவுக்கு எதிரான ட்ரம்ப் மேற்கொண்ட பிரச்சாரத்தால் சீன மக்கள் கவலை கொண்டிருந்தனர். ட்ரம்பின் வருகையால் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

ஷாங்காய் நகரைச் சேர்ந்த அரசியல் நிபுணர் சின் டெயுன் கூறும்போது, உலக நாடுகளில் அதிக அதிகாரத்தில் இருக்கும் தலைவரான ட்ரம்பின் சீன பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

1744 total views