ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கலாம்

Report
65Shares

சீனாவின் ஷியாங் ஷியோ போல் என்ற மது கம்பெனி ரூ.1 லட்சம் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் பைஜு எனப்படும் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ‘பைஜு’ என்பது தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுவாகும்.

சீனாவில் ஷாங்காய் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் திகதி பெரியளவிலான வர்த்தக திருவிழா நடைபெறுவதுடன் பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் திருவிழா இன்று நடைபெறும் நிலையில் குறித்த மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது.இன்று ரூ.1 லட்சம் முன் பணம் அதாவது 11, 111 யுவான் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் பைஜு எனப்படும் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சலுகை 99 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மாதந்தோறும் 12 பெட்டிகள் மது வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு பெட்டியிலும் 12 போத்தல்கள் வீதம் இருக்கும். ஒருவேளை அவர் 5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும்.

இந்தசலுகையை பெற்றுக் கொள்வதற்கு சீன குடிமகன்களிடையே கடும் போட்டிகள் காணப்படுவதும் குறிப்பிடதக்கது.

2541 total views