வீதியோரங்களில் தொழுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி

Report
20Shares

வீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

பரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய 3 வர்ணங்களைக் கொண்ட பட்டிகளை அணிந்திருந்ததுடன், தேசியகீதத்தை இசைத்தவண்ணம்; சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, வீதியோரங்களில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பொதுவிடங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, பிரான்ஸில் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1118 total views