பிரிஜித் மக்ரோனுக்கு 440,000 யூரோக்கள் ஒதுக்கியுள்ள எலிசே!!

Report
40Shares

நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோனுக்கு எலிசேயில் இருந்து, வருடத்துக்கு 440,000 யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை எலிசே பேச்சாளர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணியின் செலவீனங்கள் வெளியிடப்படுவது இதுவே முதன் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கும் போது, 'பிரிஜித் மக்ரோனுக்காக செலவிடப்படும் பணத்தினை அறிவிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை. நாட்டின் முதல் பெண்மணிக்கு ஒவ்வொரு வருடமும் 440,000 யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழு அளவில் இருக்கும். அது ஜனாதிபதியின் மனைவி என்பதால் மிக அவசியமாகிறது!' என தெரிவித்துள்ளார். தவிர, இது முழுக்க முழுக்க வெளிப்படையான தகவல் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிஜித் மக்ரோன் எலிசேயில் தங்குவது குறித்தும், அவருக்காக அரசு செலவு செய்வது குறித்தும் சில ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1519 total views