செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வீரர்களின் கண்களுக்கு ஆபத்து?

Report
167Shares

செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளியில் பயணிக்கும் வீரர்களின் கண்கள் எதனால் பாதிக்கப்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு சவால்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த விண்வெளி ஆராய்ச்சியின் முடிவில் இதுவரை பல மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளன.

ஆனால், விண்வெளி பயணம் மேற்கொண்ட பின்னர் பூமிக்குத் திரும்பும் மூன்றில் இரண்டு வீரர்களுக்கு பார்வை குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்ற கேள்விக்குப் பல ஆண்டுகளாகப் பதில் கிடைக்கவில்லை.

விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து விட்டுப் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரரான ஸ்கொட் கெல்லியும் இதே பிரச்சினையை எதிர்க்கொண்டார்.

எனினும், இந்த மர்மத்துக்கு என்ன காரணம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இது விண்வெளி பயணம் தொடர்பான முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் எனவும் கூறியுள்ளனர்.

அதாவது, விண்வெளி பயணம் மேற்கொண்ட பிறகு ஒருவர் பூமிக்குத் திரும்பும் போது அவரது மூளையைச் சுற்றியுள்ள ஒருவகை திரவத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றமானது அவரது முதுகு தண்டுவடத்திலும் நிகழ்வதால் அவரது பார்வைத் திறன் குறைந்து விடுவது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தப் பார்வைத் திறன் குறைப்பாட்டை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கப் பயணமாக உள்ள அனைத்து விண்வெளி வீரர்களும் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

5572 total views