மனைவியை அடித்து கொலை செய்த காவல்துறை அதிகாரி! தற்கொலை!!

Report
27Shares

காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். பரிஸ் Corrèze பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளில், குறித்த காவல்துறை அதிகாரியின் மனைவி, அவரும் காவல்துறை அதிகாரியாவார். 44 வயதுடைய மனைவி மோசமான காயங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரை அவரின் கணவர் தான் அடித்திருக்கவேண்டும் என்ற ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரின் மனைவி இறந்துள்ளார்.

மனைவி இறந்ததைத் தொடர்ந்து, குறித்த காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது சேவைத் துப்பாக்கியால் Corrèze இல் உள்ள அவரது வீட்டில் வைத்து தற்கொலை டெய்துகொண்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளர். அதேவேளை சனிக்கிழமை Bois de Vincennes இல் மற்றுமொரு காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1707 total views