கிழவா, குண்டா, குள்ளா.... டிவிட்டரில் அக்கபோர்

Report
35Shares

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கும் இடையே நடைபெறும் வார்த்தைபோர் டிவிட்டரில் கலைகட்டியுள்ளது.

வடகொரிய அணு ஆயுத சோதனைகளுக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வடகொரிய மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது.

இதன் விளைவாக வடகொரியாவை தாக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது அமெரிக்கா. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரு நாட்டு அதிபர்களும் டிவிட்டரில் வார்த்தை போரில் ஈட்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று கிம் ஜாங் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டிரம்ப், தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும், நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

1930 total views