சிம்­பாப்வே அமைச்­ச­ர­வை­யில் இரா­ணுவ அதி­கா­ரி­கள்

Report
15Shares

சிம்­பாப்­வே­யின் புதிய அதி­ப­ரான எமர்­சன் தனது அமைச்­சர்­களை நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தார். இதில் இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­கள் இரு­வர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

சிம்­பாப்­வே­யில் கடந்த 14ஆம் திகதி ஆட்சி அதி­கா­ரத்தை இரா­ணு­வம் கைப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து, கடந்த 37 ஆண்­டு­க­ளாக அந்த நாட்­டின் அதி­ப­ராக இருந்த முகாபே பதவி வில­கி­னார். இதை­ய­டுத்து துணை அதி­ப­ராக இருந்த எமர்­சன் நங்­காக்வா கடந்த வாரம் புதிய அதி­ப­ராகப் பொறுப்­பேற்­றார்.

அவர் தனது அமைச்­சர்­களை நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தார். அதில் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இரா­ணு­வத்­தின் தலை­மைத் தள­பதி சிபு­சிசோ மோயோ அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். விமா­னப் படைத் தள­பதி பெரன்ஸ், விவ­சா­யம் மற்­றும் நிலத்­துறை அமைச்­ச­ராக நிய­ மிக்­கப்­பட்­டுள்­ளார்.

முன்­னாள் அதி­பர் முகா­பே­யின் அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றி­ருந்த பல­ருக்கு எமர்­சன் மீண்­டும் வாய்ப்பு வழங்­கி­யுள்­ளார். என்­றா­லும் முகா­பே­வுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­ட­வில்லை.

935 total views