அதிஸ்டம் இருந்தும் சிக்கிக் கொண்ட ஏழை மாணவி!

Report
65Shares

தென்னாபிரிக்கா ஏழை மாணவிக்கு அதிஸ்டம் இருந்தும் சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஏழை மாணவி ஒருவரின் வங்கி கணக்கில் நிதி உதவி காசோலையானது தவறுதலாக அதிகமாக அனுப்பப்பட்டதால் அந்த மாணவி அதனை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது தெரியவந்ததையடுத்து அவர்மீது நடவடிக்;கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Walter Sisulu பல்கலைகழகத்தில் சுமார் 18 ஆயிரம் மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிதி உதவி காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவிகளை தெரிவு செய்து அவர்கள் படிப்பதற்காக புத்தகம் வாங்கி கொள்வதற்கும், உணவுக்கும் மாதம் 108 டொலர் வழங்கப்படும்.இந்த தொகையானது, மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்நிலையில் இந்த மாணவிகளில் ஒருவரான Sbongile Ma என்ற மாணவியின் வங்கி கணக்கில் 1 மில்லியன் டொலர் தொகையை வங்கியானது அனுப்பியுள்ளது.

தனது வங்கி கணக்கில் இவ்வளவு தொகையை பார்த்த வங்கி மாணவி அதனை கல்லூரி மற்றும் தனது தோழிகள் யாரிடமும் தெரிவிக்காமல் செலவு செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஆடைகள் வாங்குவது, இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தோழிகளுக்கு பரிசுகளை வாங்கிகொடுப்பது, தன்னை அழகுபடுத்துவது என பல வழிகளில் பணத்தினை செலவு செய்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஐபோன் 7 வாங்கி அதனை தனது சக மாணவிகளிடம் காட்டியதில் அவர்களுக்கும் சந்தேகம் வந்துள்ளது.இதற்கிடையில் இவர் சிறிய கடை ஒன்றில் பொருட்களை வாங்கியபோது பணம் செலுத்தி ரசீது வாங்கியுள்ளார்.

அந்த கடையின் வாயிலாக இவரது வங்கி கணக்கில் இருந்த பணம் இணையதளத்தில் வெளியானது.தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 1 மில்லியன் டொலர் என்பது பெரிய தொகையாகும்.

அதுவும் படிக்கும் ஏழை மாணவியான இவரிடம் எவ்வாறு இவ்வளவு தொகை வந்தது என்ற சந்தேகம் வலுத்தது.இந்த தகவல் உள்ளூர் மாணவர் மாநாட்டின் துணைப் பிரிவின் செயலாளர் ஆஙாய என்பவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் தேசிய மாணவர் நிதி உதவி திட்ட செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மாணவி ஒரு நாளைக்கு 860 டொலர் செலவு செய்துள்ளார். இரண்டரை மாதங்களில் 65 ஆயிரம் டொலர் செலவு செய்துள்ளார் எனவும் தெரியவந்தது.இந்நிலையில் குறித்த மாணவி மீது பல்கலைகழக நிர்வாகம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் மாணவி பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

2861 total views