அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை!

Report
126Shares

அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அணமையில் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.

நியுயோர்க்கில் உள்ள மேற்கு ப்ரைட்டன் பகுதியில் வைத்து குறித்த 63 வயதான பெண் கொலை செய்யப்பட்டார்.

அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கைக்கு வருவதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே இந்த கொலை இடம்பெற்றது.

இதுதொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக கொலை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை அவர் தரப்பு சட்டத்தரணி, நேற்றைய வழக்கு விசாரணையின் போது நிராகரித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, சந்தேக நபர் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்தனர்.

இதன்போது இந்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

5166 total views