வெள்ளத்தில் மிதந்த நியூயார்க் ஏர்போர்ட்

Report
29Shares

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில், தீயணைப்பு தடுப்பு சாதனத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விமான நிலையத்தின் பேக்கேஜ் பிரிவில் தண்ணீர் தேங்கியது.

இதன் காரணமாக, விமான சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

பிரச்னை ஏற்பட்ட பகுதிக்கு தான் சர்வதேச விமானங்களில் வரும் பயணிகள் பயன்படுத்துவது. இதன் காரணமாக பயணிகளின் உடைமைகளை கையாள்வது, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.

1421 total views