டிரம்பிற்கு மனநல சோதனை? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை

Report
13Shares

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது. ஆனால் மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோருக்கும் மருத்துவ சோதனை செய்வது கட்டாயம். தற்போதைய அதிபர் டிரம்பிற்கு முன்பே இந்த மருத்துவ சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த சோதனை நேற்றுதான் நடைபெற்றது.

இந்த மருத்துவ சோதனையின் முடிவு வரும் 12ஆம் தேதி இணையதளத்தில் அனைவரும் பார்க்குமபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அறிக்கை விவரம் வெளிவராத நிலையில் வெள்ளை மாளிகை சார்ப்பில் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய உணவு பழக்கவழக்கம் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறது என்றும் மனநல சோதனை நடத்த எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1223 total views