டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை

Report
5Shares

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா எழுத்தாளர் மைக்கேல் வுல்ப் எழுதிய 'பயர் அன்ட் பியூரி:இன்சைட் தி டிரம்ப்ஸ் ஒயிட் கவுஸ்' என்ற புத்தகம், சமீபத்தில் வெளியானது.

இதில் பலர் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் டிரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மனநல பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், தற்போதைய அமெரிக்கஅதிபர் டிரம்பிற்கு அப்பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே டிரம்பின் மனநிலை குறித்த சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.இதன் முடிவு ஜன. 12ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்பின் உடல்நிலை நன்றாக உள்ளது, அவரின் உடலில் பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை, உணவு பழக்க வழக்கம் மட்டும் சற்று மோசமாக உள்ளது. அவருக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை' என தெரிவித்துள்ளது

1020 total views