அமெரிக்க பாதுகாப்பு உதவித்தொகையை நிறுத்தியதால் பாகிஸ்தானின் நிலை என்ன?

Report
6Shares

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடினார். பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி வலைச்சமூகம், அல்கொய்தா, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது அந்நாட்டின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

எனவே, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்த பிறகே பாதுகாப்பு உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகளை சில... அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், ராணுவ மற்றும் மனிதவள ஆதாரங்களை மேம்படுத்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் உடனடி திட்டங்கள் முடங்கும்.

பாகிஸ்தான் தனது ராணுவ அமைப்பை திறன்மிக்கதாக பராமரிக்க தேவையான நிதியுதவிகளை சீனா அல்லது வேறு எந்த ஒரு நட்பு நாடும் நீண்டகாலம் கொடுக்கமுடியாது என்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது.

396 total views