8 வயது சிறுமி கற்பழித்து கொலை: பாகிஸ்தானில் பரபரப்பு!

Report
18Shares

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வீட்டில் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடந்த வாரம் கடத்தி சென்றது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் நேற்று இரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டும் பேர் உயிரிழந்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பனிபுரியும் பெண் ஒருவர், தனது குழந்தையுடன் தொலைக்காட்சி முன் தோன்றி இந்த சம்பவம் குறித்த வேதனையையும் வலியையும் பதிவு செய்தார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு மக்கள் அதிக அளவில் குரல் கொடுத்து வருவதால் பாகிஸ்தான் போலீஸார் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க செயல்பட்டு வருகின்றனர்.

682 total views