கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்!

Report

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக நாடுகள் ட்ரம்ப்-பின் ஆளுமை போக்கு புரியாமல் உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் வட கொரியா, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒளிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள்வுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் அமைதி சூழல் திரும்பவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ராணுவ அணிவகுப்பிற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் வட கொரியா அதிபரும் ராணுவ அணிவகுப்பிற்கு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், பாரீஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை ரசித்த ட்ரம்ப், தற்போது அமெரிக்காவிலும் அது போன்ற அணிவகுப்பை நடத்த விருப்பப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகக கட்சி ட்ரம்ப்பின் இந்த செயலை எச்சேத்திகார அரசுகள் செய்வது போன்ற செயல் இது என விமர்சித்துள்ளனர்.

1468 total views