தென்கொரியா செல்கிறார் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி

Report

தென்கொரியாவில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள குளிகால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்துகொள்ளவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை ஆரம்பமாகின்றது.

இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது.

இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, தென்கொரியா சென்றுள்ளது.

இந்தநிலையில், நாளைய ஆரம்ப நிகழ்வில் வட கொரிய ஜனாதிபதியின் சகோதரி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

979 total views