செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட கார், பாதையில் இருந்து விலகி வேறு திசையில் சென்றது.

Report

அமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட டெஸ்லா கார், அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், கேப் கேனவரலில் அமைந்து உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அந்த கார், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 6 மாதங்களில் செவ்வாய்க்கு அருகே செல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதிக உந்து சக்தி காரணமாக அந்த கார் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தடத்தை கடந்து அதிக தூரம் சென்று விட்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சென்ற அந்த கார், தற்போது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறது.

இந்த தகவலை எலோன் மஸ்க், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அமெ­ரிக்க நேரப்­படி செவ்வாய் பிற்­பகல் 3.45 மணிக்குஇந்த ரொக்கெட் ஏவப்­பட்டது.

வழ­மை­யாக சோத­னை­யாக ஏவப்­படும் ரொக்­கெட்­டு­களில் சரக்குப் பகு­தியில் கொங்­கிறீட், இரும்பு போன்ற பொருட்­களே வைக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்தின் ஸ்தாப­கரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான இலோன் மஸ்குக்கு இது அலுப்­பூட்தியதால்,

டெஸ்லா நிறு­வ­னத்தின் Tesla Roadster (ரோட்ஸ்டெர்) ரக காரை மேற்­படி ரொக்­கெட்டின் சரக்குப் பகு­தியில் இணைத்து விண்­வெ­ளிக்கு அனுப்பினார் இலோன் மஸ்க்.

சிவப்புக் கிர­கத்தை நோக்கி சிவப்பு கார் அனுப்­பப்­ப­டு­வ­தாகவும், இந்தக் கார் ஏவப்­ப­டும்­போது வெடித்துச் சித­றா­விட்டால் பல பில்­லியன் வரு­டங்கள் விண்­வெ­ளியில் வலம் வரும் என இலோன் மஸ்க் தெரிவித்து இருந்த நிலையில், செவ்வாய் சென்ற கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறது.

10787 total views