விமானத்தை கைகளால் தள்ளிய பயணிகள்

Report

இந்தோனசியாவில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சியில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளுவது போன்ற விளம்பரம் ஒன்று ஒளிப்பரப்பாகும்.

அதே போல இந்தோனேசியாவின் தம்போலாகா விமான நிலையத்தில், கருடா இந்தோனேசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஒடுதளத்தில் இறங்கியது. அந்த

விமானத்தை பயணிகள் அனைவரும் தள்ளுவது போன்ற நகைச்சுவையான வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.

இது குறித்து விளக்கமளித்த இந்தோனேசியா விமான நிலையம், விமானம் தவறான திசையில் இறங்கியதாலும், விமானம் தள்ளும் கருவி இல்லாததாலும், விமானத்தை விமான

ஊழியர்கள் கைகளால் தள்ளினார்கள் என தெரிவித்துள்ளனர்.

1242 total views