ஹாங்காங் பஸ் விபத்து; 18 பேர் பலி

Report

ஹாங்காங்கில் நேற்று நடந்த பஸ் விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பயணியருடன் தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.

ஹாங்காங்கின் வடக்கு பகுதியில் உள்ளநெடுஞ்சாலை வழியே அந்த பஸ் வேகமாக பயணித்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 18 பேர் உயிர் இழந்தனர் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சின் கூரையை உடைத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

சாரதி மிக வேகமாக ஓட்டியதாகவும் வளைவுகளில் மிக ஆபத்தாக திருப்பியதாகவும் அதனால் தான் விபத்து நேர்ந்தது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் நடந்த மற்றொரு பஸ் விபத்தில் 27 பேர் பலியாயினர்.

599 total views