வெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட: புட்டின்

Report
53Shares

வெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

புட்டின் என்கிற பெயரில் ஒரு ஆவணப்படம் தாயாரிக்கப்பட்டுள்ளது, அதில் ரஷ்யா அதிபர் புட்டின் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்கானல் இடம் பெற்றுள்ளது.

2014 பிப்ரவரி 7ம் தேதி சோச்சியில் குளிர்கால ஓலிம்பிக் போட்டித் தொடக்க நாளன்று உக்ரைனிலிருந்து துருக்கிக்கு புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி வெடிகுண்டு வைத்திருந்ததாகவும் அவர் விமானத்தை சோச்சி நோக்கி திருப்ப சொன்னதாகவும் புட்டினுக்கு தகவல் கிடைத்துள்ளது.

விமானத்தில் 110 பயணிகளும், சோச்சி மைதானத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருந்த நேரத்தில் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாகவும் புட்டின் தெரிவித்தார்.

பின்னர் சற்று நேரத்தில் குண்டு வைத்திருந்ததாக கூறிய பயணி குடித்துவிட்டு உளரியதாகவும், குண்டு இல்லை என்று தெரிந்ததம் அந்த விமானம் துருக்கிக்கு சென்றுவிட்டதாகவும் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார்

2443 total views