ஜோதிட நிலையத்தையே இடித்து தரைமட்டமாக்கிய 70 வயது பெண்

Report
44Shares

சீனாவில் ஜோதிடர் பொய் கூறியதால் ஆத்திரத்தில் அந்த பெண் ஜோதிட நிலையத்தையே இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சிசுவான் மாகாணம் மியான்யங் பகுதியைச் சேர்ந்தவர் வாங்(70), இவர் கடந்த ஆண்டு அங்கிருக்கும் ஜோதிடர் ஒருவரை சந்தித்துள்ளார்.

அப்போது ஜோதிடர் அந்த பெண்ணிடம், நீ 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டாய் என்று கூறியுள்ளார். இதனால் தன்னுடைய மரணத்தை அறிந்த அப்பெண், பயத்திலே வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் 2018-ஆம் ஆண்டும் வந்தது, அவரது உடல்நிலையும் நன்றாக உள்ளது. எந்த வித பிரச்சனையும் அவருக்கு ஏற்படவில்லை.

ஜோதிடரை நம்பி நம் வாழ்க்கையை பயத்திலே வாழ்ந்துவிட்டோமே என்று எண்ணி அப்பெண் கடந்த வாரம் ஜோதிட நிலையத்திற்கு சென்று ஜோதிடரை சந்தித்துள்ளார்.

அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார், அதன் பின் ஆத்திரம் தீராத அவர் ஜோதிட நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ளார்.

பொலிசாருக்கு இது குறித்த தகவல் தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்துள்ளனர். விசாரணை நடத்திய போது பொய் சொல்லி வாங்கை நோகடித்த காரணத்திற்காக, பொலிசார் ஜோதிடரை மன்னிப்பு கேட்கும் படி கூறியுள்ளனர்.

சீனாவில் ஜோதிடம் பிரசித்தி பெற்ற கலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2366 total views