எபோலா நோய் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Report
19Shares

எபோலா நோய் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், இந்த நோய் மீண்டும் காங்கோ நாட்டில் பரவி வருகிறது. இதனால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எபோலா நோயால் தான் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எபோலா நோய் மீண்டும் பரவி வருவதால் அனைத்து நாடுகளையும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான அதிகாரபூர்வமான சிகிச்சை எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

1144 total views