இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல்

Report
15Shares

இந்தோனேசியாவின் சுரபயாவில் இன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலில் இந்தோனேசியப் பொலிஸார் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபாயவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 8:50 மணியளவில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சேதங்களின் விபரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனவும் கிழக்கு ஜாவா பொலிஸ் நிலைய ஊடகப்பேச்சாளர் Frans Barung Mangera தெரிவித்துள்ளார்.

சுரபயாவில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்களில் நேற்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ச்சியாக இன்று இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா அமைப்பினரால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களை இந்தோனேசிய வெற்றிகரமாக எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் இந்தத் தீவிரவாத அமைப்புக்களின் நிலை ஓங்கிநிற்பது குறிப்பிடத்தக்கது.

1057 total views