ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்!

Report
92Shares

இந்தோனேஷிய சுரபாய நகரத்தில் நேற்று மூன்று கிறீஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு சிறார்களுடனான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தற்கொலை குண்டுதாக்குதலில் எட்டு பேர் பலியாகினர்.

இது தவிர, இன்று காலை இடம்பெற்ற காவல் நிலைய தாக்குதல் பிறிதொரு குடும்பந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு உந்துருளிகளில் பயணித்த தற்கொலை குண்டுதாரிகள் காவல்நிலையத்தின் பிரதான வாசலின் ஊடாக அதிரடியாக பயணித்து குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரான்ஸ் பரூங் மன்ஜீரா (Frans Barung Mangera) தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நான்கு தற்கொலை குண்டுதாரிகளும் கொல்லப்பட்டனர்.

இது தவிர, காவல் நிலையத்தில் இருந்த 4 காவல்துறை அதிகாரிகள் உட்பட 10 படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றைய தேவாலய தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஜமா அன்ஷாருட் டவுலா (Jamaah Ansharut Daulah) என்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக இந்தோனேஷியாவின் காவல்துறையின் தலைவர் ஜென்ரல் ரிற்றோ கர்னாவியான் (Tito Karnavian) தெரிவித்துள்ளார்.

தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட குடும்பத்தினர் சிரியாவில் இருந்து அண்மையில் இந்தோனேஷியாவிற்கு வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4629 total views