ஆஸ்திரேலியர் புதிய சாதனை

Report
4Shares

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் பிளெய்ன் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலகின் உயரமான ஏழு சிகரங்களை 117 நாட்களில் அடைந்து புதிய சாதனை செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் பிளெய்ன் தனது குழுவில் உள்ள இருவரோடு உலகின் உயரமான (8,848 மீட்டர்) எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த திங்கள்கிழமை அடைந்தார். இதற்கு முன்பு உலகின் உயரமான 6 சிகரங்களை ஏறிய அவர் 7-வதாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். 117 நாட்களில் ஸ்டீவ் பிளெய்ன் இந்த புதிய சாதனையை செய்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு போலந்து நாட்டைச் சேர்ந்த ஜானுஸ் கோச்சன்ஸ்கி என்பவர் 126 நாட்களில் ஏழு சிகரங்களை அடைந்து சாதனை செய்திருந்தார். அதை இப்போது ஸ்டீவ் பிளெய்ன் முறியடித்துள்ளார்.

828 total views