வடகொரிய அதிபருக்கு பாதுகாப்பு வழங்க தயார்: அமெரிக்க அமைச்சர் மைக் போம்பியோ தகவல்

Report
18Shares

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பை வழங்கத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை மையம் இருப்பது அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலான விஷயம். எனவே, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை மையத்தை 10 முதல் 12 நாட்களுக்குள் தகர்க்கப் போவதாக வடகொரியா அறிவித்திருப்பது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் நல்ல செய்தி.

அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் பல்வேறு விஷயங்களில் வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி வரும் வாரங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1201 total views