இஸ்ரேலின் தாக்குதலில் 58 பலஸ்தீனர்கள் பலி, 2700 பேர் காயம்

Report
16Shares

ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலஸ்தீனர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 58 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 2700 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் பல நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்தில் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டவிரோத இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்தில் அமெரிக்கா புதிய தூதரகத்தை நேற்று(14) திறந்துள்ளது.

மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்துக்கு மாற்றப்படும் என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று (14) திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர் பலர் பங்கேற்றனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

1220 total views