இஸ்ரேல் ஒரு பயங்கரவாத தேசம்- துருக்கி ஜனாதிபதி

Report
22Shares

இஸ்ரேல் ஓர் இன அழிப்பையே மேற்கொள்கின்றது என துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு மனிதப் பேரவலம். இந்த அழிவில் ஈடுபட்டவர்களை நான் சபிக்கின்றேன். அவர்கள் இஸ்ரவேலர்களாகவோ அல்லது அமெரிக்கர்களாகவோ இருக்கலாம்.

எல்லா மதங்களிலும் உள்ள புத்திஜீவிகளை இந்த அநியாயத்துக்கு எதிராக குரல் எழுப்பும்படி நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத தேசம் எனவும் அந்த அரசு பயங்கரவாதத்தை நடாத்துகின்றது எனவும் துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிலுள்ள தனது தூதரகத்தை இடமாற்றம் செய்வதற்கு அமரிக்கா முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துருக்கியின் தலைநகர் ஸ்தான்புலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1480 total views