ஒசாமா குறித்து புதிய பரபரப்பு

Report
452Shares

ஒசாமா பின்லாடனை பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் ஓப்படைத்தது என பாக்கிஸ்தானின் முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1990 களில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவின் ஐஎஸ்ஐயிற்கு தலைமைதாங்கிய அசாட் டுரானி என்பவர் தனது ஸ்பை குரொனிக்கல்ஸ் என்ற நூலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாட்டுடன் இணைந்து எழுதிய நூலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நூலில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் ஒசாமா பின் லாடன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்ற தகவலே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவினரிற்கு ஒசாமா இருக்குமிடம் குறித்து தெரியவந்தது அதன் பின்னர் அவர் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டார் என அந்த நூலில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானிய மக்கள் பெரிதும் மதித்த ஒருவரை அமெரிக்காவிடம் கையளித்தது தெரியவந்தால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என கருதியதாலேயே பாக்கிஸ்தான் இதனை மூடி மறைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதனை தொடர்ந்து தனது முன்னாள் புலனாய்வு அதிகாரிக்கு எதிராக பாக்கிஸ்தான் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் டுரானி பாக்கிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கும் பாக்கிஸ்தான் இராணுவம் தடை விதித்துள்ளது.

முன்னாள் அதிகாரி இராணுவநீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

16377 total views