கனடாவில் காணாமல் போன தமிழரை ஒரு நாளில் கண்டுபிடித்த பொலிஸார்!

Report
328Shares

கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரொரண்டோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி காலை 4 மணிக்கு இறுதியாக பாஸ்கரன் குடும்பத்துடன் பேசியுள்ளார். Victoria Park Avenue மற்றும் Hwy. 401 பகுதியில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஒரே நாளில் அவர் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Victoria Park Avenue மற்றும் Hwy. 401 பகுதியில் அவரது வாகனம் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் பொலிஸார் அவர் காணாமல் போய்விட்டார் என்பது குறித்து வருத்தமடைந்துள்ளனர். எனினும் பொலிஸார் அவர் உள்ள இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

10751 total views