ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் : 19 போலீஸார் உயிரிழப்பு

Report
13Shares

ஆப்கானிஸ்தானில் போலீசார் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.

இதனை ஏற்று 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று போலீஸார் மீது தலிபான்கள் நடத்தி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

1030 total views